தென் தமிழகத்திற்கு விண்வெளி வரம்! ₹100 கோடியில் அதிநவீன மையம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தென் தமிழகத்தில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய விண்வெளி ஏவுதளத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, IN-SPACe அமைப்புடன் இணைந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் விண்கலங்களுக்கான பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான ஆராய்ச்சி, பரிசோதனை, உற்பத்தி வசதிகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் புதிய முதலீடுகள் அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.
0
Leave a Reply